பிரதமர் ஏழைகள் நலவாழ்வுத் திட்டத்தின் கீழ் ரூ.53,248 கோடி விநியோகம்

0 1748

பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு உதவித் திட்டத்தின் கீழ் இதுவரை  ஏழை மக்கள் 42 கோடி பேருக்கு  53,248 கோடி ரூபாய் வழங்கி உள்ளதாக நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

நேற்று வரை இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்ட நிதியுதவிகளை பட்டியலிட்டுள்ள நிதி அமைச்சகம், 8.19 கோடி விவசாயிகளுக்கு முதற்கட்டமாக 16,394 கோடி  வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஏழைப் பெண்கள் வங்கிக் கணக்கான ஜன்தன் திட்டத்தில், இரண்டு கட்டமாக 20,344 கோடி ரூபாய் செலுத்தப்பட்டதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதியோர், கணவனை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள்  என மொத்தம் 2.81 கோடி பேருக்கு  இரண்டு கட்டங்களாக 2814.5 கோடியும், 2.3 கோடி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 4312.82 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments