கொரோனா காலத்தில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு
கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையின்போது மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட மருத்துவமனையில் செயல்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூளைச்சாவு அடைந்த நன்கொடையாளர் மற்ற பொது நோயாளிகள், சந்தேகத்துக்கிடமான கொரோனா நோயாளிகளுடன் ஒரே தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கக் கூடாது.
உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அறுவை அரங்கத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவை இதற்கு மட்டுமே சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
வேறு பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. இத் திட்டத்துக்கான முழுக் குழுவினரையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு #Coronavirus | #COVID19India https://t.co/Lqxzj011LS
— Polimer News (@polimernews) June 3, 2020
Comments