கட்டுக்குள் வர மறுக்கும் கொரோனா.. உச்சம் தொட்ட அச்சம்..!

0 6757

நாடு முழுவதும் கொரோனாவின் பிடியில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 8 ஆயிரத்து 909 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரத்தை தாண்டி விட்டது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை பெருமளவில் தளர்த்தியுள்ளதாலும், கொரோனா பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாலும், வைரஸ் தொற்று உறுதி ஆவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதேநேரம் கொரோனாவின் பிடியில் இருந்து விடுதலை ஆகி, வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 8 ஆயிரத்து 909 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. ஒரே நாளில் 217 பேர் பலி ஆனதால் கொரோனா உயிர்ப்பலி 5 ஆயிரத்து 800-ஐ தாண்டி உள்ளது.

ஒரே நாளில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 158 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை நாடு முழுவதும் 41 லட்சத்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை முடிந்துள்ளதாக I C M R தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரு லட்சத்து ஆயிரத்து 497 பேர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேநேரம், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

நாட்டில் கொரோனா பாதித்த மாநிலங்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் மஹாராஷ்டிராவில் வைரஸ் தொற்றுஉறுதி ஆனோர் எண்ணிக்கை 72 ஆயிரத்தை தாண்டி விட்டது. 2 - வது இடம் வகிக்கும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, 25 ஆயிரத்தை நோக்கி முன்னேறி வருகிறது.

டெல்லி 3- வது இடம் வகிக்க, அங்கு கொரோனா பாதிப்பு, 22 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. 4 - வது இடம் வகிக்கும் குஜராத்தில், வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை நோக்கி முன்னேறுகிறது.

ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்து 500 -ஐ நெருங்கி, இந்த பட்டியலில் , அம்மாநிலம் 5 - வது இடம் வகிக்கிறது . மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு, கணிசமாக உயர்ந்து உள்ளது.

பல மாநிலங்களில் வேகமாகவும் சில மாநிலங்களில் கணிசமாகவும் உயரும் கொரோனா, கட்டுக்குள் வர மறுப்பதால், ஒடுக்கும் பணியை சுகாதாரத்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments