பாகிஸ்தானின் துறைமுகத்தை வலுப்படுத்தும் சீனா..!
பாகிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் சீனா இறங்கி உள்ளதை சமீபத்திய சாட்டிலைட் புகைப்படங்கள் வெளிக்காட்டி உள்ளன.
சுமார் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் செலவில் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பொருளாதார வர்த்தக காரிடோர் திட்டத்தின் கீழ் இந்த துறைமுகம் வருகிறது. இந்த துறைமுகத்தில் சீனா தனது கடற்படை பலத்தை அதிகரித்துள்ளதும் சாட்டிலைட் படங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது.
ஈரான் எல்லையில் இருக்கும் இந்த பாகிஸ்தான் துறைமுகத்தின் வாயிலாக, இந்திய பெருங்கடல் பகுதியில் தனது நடவடிக்கைகளை அதிகரிக்க சீனா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குவாடர் துறைமுகத்தை கடற்போருக்கான பெரிய தளமாக மாற்றுவதே சீனாவின் இலக்கு என்று இந்திய பாதுகாப்புத் துறையை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments