கரையைக் கடக்கிறது நிசர்க்கா புயல்..!
அரபிக் கடலில் உருவான நிசர்க்கா புயல் மகாராஷ்டிரத்தின் ராய்காட் மாவட்டத்தில் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மகாராஷ்டிரத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
கிழக்கு மத்திய அரபிக் கடலில் உருவான நிசர்க்கா புயல் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் நகர்ந்து வந்தது. இந்தப் புயல் ஹரிஹரேஷ்வர் - டாமன் இடையே மகாராஷ்டிரத்தில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வுத்துறை தெரிவித்தது.
அதன்படி மும்பைக்குத் தெற்கே உள்ள ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் அருகே பிற்பகலில் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதனால் ராய்காட் மாவட்டத்தில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசுவதுடன் இடைவிடாமல் மழையும் பெய்து வருகிறது.
நிசர்க்கா புயல் கரையைக் கடந்த பகுதியான அலிபாக்கில் தாழ்வான பகுதிகளில் இருந்து 800 பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்காலிகத் தங்கு முகாமாக மாற்றப்பட்ட இரு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
மும்பையில் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படை, மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் 500 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன.
மும்பை பைக்குல்லா ஜீஜாபாய் உயிரியல் பூங்காவில் விலங்குகள், பறவைகள் அனைத்தும் முன்கூட்டியே பாதுகாப்பான அறைகளில் அடைக்கப்பட்டன. புயலின்போது மரங்கள் முறிந்தும் சாய்ந்தும் விழுந்தால் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க இவ்வாறு முன்னேற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Comments