250 பணியாளர்களுக்கு கொரோனா? ஆவின் நிர்வாகம் மறுப்பு

0 4061

சென்னையை அடுத்த அம்பத்தூர் ஆவின் பால்பண்ணையில் 250 பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு என வெளியான செய்திக்கு ஆவின் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 250 பணியாளர்களுக்கு கொரோனா என வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என கூறப்பட்டுள்ளது.

மேலும் அரசு சார்ந்த நிறுவனமான ஆவினில், அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியே பணிகள் நடைபெறுவதாகவும், ஊழியர்கள் அனைவருக்கும் தினமும் தெர்மல் ஸ்கீரினிங் மூலம் உடல் வெப்பம் பரிசோதிக்கப்படுவதுடன், முகக்கவசம், கையுறை, சானிடைசர் போன்ற சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதவரம் பால் பண்ணையில் ஏற்கனவே நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் மட்டும் கொரோனாவால் இறந்தது உண்மை தான் எனவும், அதுவும் பால்பண்ணையில் தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments