சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்களை குறைத்த வங்கிகள்
எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகள், சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. உச்சவரம்பு வித்தியாசம் இல்லாமல் அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கும் இனி 2.70 சதவிகிதம் வட்டி வழங்கப்படும் என்றும் கடந்த 31 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளதாகவும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.
50 லட்சம் ரூபாய் வரையிலான சேமிப்புக்கு 3 சதவிகிதமும், அதற்கு மேல் உள்ள சேமிப்புக்கு 3.50 சதவிகிதம் வட்டி வழங்கப்படும் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. கடன் வழங்குதல் பெருமளவில் குறைந்து வங்கிகளிடம் தாராளமாக பணம் இருப்பதால், நிரந்தர வைப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களையும் வங்கிகள் குறைத்துள்ளன.
Comments