திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம் - ஊழியர்கள் கலக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பின்புறம் நேற்று இரவு சிறுத்தை நடமாட்டத்தால் ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மார்ச் 20 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டதால் திருமலை சுற்றுவட்டாரங்கள் 70 நாட்களுக்கு மேலாக ஆளரவமின்றி உள்ளன. இந்நிலையில் கோவிலின் பின்புறம் உள்ள கர்நாடக சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளன.
வரும் 8-ஆம் தேதி முதல் உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ள நிலையில் சிறுத்தை எங்கு உள்ளது என கண்டுபிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட, வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Comments