நடுநிலைப்பள்ளிகளிலும் 10 ஆம் வகுப்பு தேர்வு மையங்கள் -பள்ளிக் கல்வித் துறை

0 1386

மாநிலம் முழுவதும் உள்ள நடுநிலைப் பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

ஜூன் 15 முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 12,690 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. கொரோனாவை முன்னிட்டு கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்காக சிறப்புத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளதால், வரும் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் இட வசதி உடைய நடுநிலைப் பள்ளிகளை அடையாளம் கண்டு, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

7,400 தேர்வு மையங்களில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வும், 3000-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் 12-ம் வகுப்பு மாணவர்கள் 36,089 பேருக்கு பொதுத்தேர்வும் நடைபெற உள்ளதால் அந்த மையங்களை ஆய்வு செய்யமாறும் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments