ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேருக்கு கொரோனா இதுவரை உறுதி

0 4718

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 60ஆகவும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2 ஆயிரத்து 7ஆகவும் அதிகரித்துள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களிலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 585ஆக உயர்ந்துள்ளது. இதில் ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களுக்கு அடுத்து, அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆயிரத்து 921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, தேனாம்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 871 பேரும், திருவிக நகர் மண்டலத்தில் ஆயிரத்து 711 பேரும், அண்ணாநகர் மண்டலத்தில் ஆயிரத்து 411 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவில் இருந்து இதுவரை 8 ஆயிரத்து 506 பேர் குணமான நிலையில், 7 ஆயிரத்து 805 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதுதவிர்த்து 135 பேர் இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments