இந்திய-வங்கதேச எல்லையில் நிலநடுக்கம்
இந்திய-வங்கதேச எல்லையில் இன்று காலை 7.10 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவையில் இது 4.3 ஆக பதிவானது. மேகாலயாவில் உள்ள சிராபுஞ்சியில் இருந்து 82 கிலோ மீட்டர் தொலைவில், தென் கிழக்குப் பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் மையம் உணரப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் லேசான அதிர்வுகளை ஏற்படுத்தியதாவும், உயிர் மற்றும் உடைமைகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments