குற்ற ரீதியான சட்டங்களை சீர்திருத்த நடவடிக்கை எடுக்கிறது மத்திய அரசு
சிறிய குற்றங்களுக்கான சட்டங்களை சீர்திருத்துவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
தற்போதைய சட்டங்களை மாற்றியமைத்து சிறிய குற்றங்களுக்கு மாற்று சட்ட நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படுகிறது. தொழில் புரிவதற்கு தடையாக உள்ள சில சட்டங்களைத் தளர்த்துதல் போன்ற சட்டத்துறை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது.
இது தொடர்பாக அமைச்சக செயலர் ராஜீவ் கவுபா மத்திய அமைச்சரவை செயலர்களுக்கு எழுதிய கடிதத்தில் தங்கள் துறைகளின் கீழ்உள்ள சட்டங்களை சீர்திருத்துவது குறித்து ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
சாதாரண மக்களுக்கு சட்டத்தால் எந்தவித துன்பமும் இடையூறும் ஏற்படக்கூடாது என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.அவதூறு வழக்குகள், காப்புரிமை வழக்குகள், தொழில் ரீதியான குற்றங்களை அபராதத்துடன் நிறுத்திக் கொண்டு தண்டனைகளை குறைப்பது போன்றவை இதில் அடங்கும்.
Comments