இந்தியாவில் கொரோனா இறப்பு சதவிகிதம் 2.82 ஆக உள்ளது
நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் 2 புள்ளி 82 சதவிகிதமாக உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால், கொரோனா இறப்புகளில் 50 சதவிகிதம் பேர் மூத்த குடிமக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா இறப்பு சதவிகிதம் தொடர்ந்து இறங்குமுகமாக உள்ளது என்ற அவர், சர்வதேச இறப்பு விகிதம் 6 புள்ளி 13 ஆக இருப்பதை சுட்டிக்காட்டினார்.
உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனா இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளதாக அவர் கூறினார்.
அதே போன்று கொரோனாவால் நாட்டில் ஏற்படும் மரணங்களில், 73 சதவிகிதம் பேர், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இருதய, சுவாசப் பிரச்சனைகளால் ஏற்கனவே அவதிப்படுபவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#UPDATE: 1,091 new COVID-19 positive cases reported in Tamil Nadu today bringing the total to 24,586@CMOTamilNadu @Vijayabaskarofl @MoHFW_INDIA
— National Health Mission - Tamil Nadu (@NHM_TN) June 2, 2020
For more information visit: https://t.co/YJxHMQexUK
Comments