ஜம்மு-காஷ்மீரின் டிரால் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

0 2076

ஜம்மு-காஷ்மீரின் டிரால் பகுதியில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஸ் இ முகமது அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.   

டிரால் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள், சிஆர்பிஎப் வீரர்கள், மாநில போலீசார் ஆகியோர் உளவுத் தகவலின்பேரில் கூட்டாக பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், அவர்களின் சடலங்கள் அருகில் கிடந்த ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. 

கடந்த 3 நாள்களில் அப்பகுதியில் பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் இடையே நடைபெற்ற 3ஆவது துப்பாக்கிச் சண்டை ஆகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments