ராயபுரம் மண்டலத்தில் மேலும் 125 பேருக்கு கொரோனா

0 1278

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றின் மையமாக திகழும் ராயபுரம் மண்டலத்தில் நேற்று வரை 2 ஆயிரத்து 935பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 125பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 60ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் இன்று உயிரிழந்ததால் பலியானோரின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்று தொடர்பாக ராயபுரம் மண்டலத்தில் நாளொன்றுக்கு 200 முதல் 500 பேர் வரை சோதனை நடத்தப்படும் நிலையில், அத்தொற்றை கட்டுப்படுத்த கபசுரகுடிநீர், மூலிகை டீ வழங்கும் பணியும் மறுபக்கத்தில் நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments