அகற்றப்படாத சாலை தடுப்புகளால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்..

0 1288

சென்னையில் ஊரடங்கு தளர்வு அமலானதை அடுத்து வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், ஆங்காங்கே அகற்றப்படாத சாலை தடுப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. முழு ஊரடங்கு நாட்களில், வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

தற்போது பல்வேறு பணிகளுக்கும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து அதிகரித்துள்ள போதிலும், சாலை தடுப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் அலுவலக நேரங்களில் வாகனங்கள் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் டைடல் பார்க் சந்திப்பில் திருவான்மியூர் செல்லும் வாகனங்கள் இடது புறம் திரும்பும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த சாலை தடுப்பால் அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள், அதனை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து அந்த சாலை தடுப்பு அகற்றப்பட்டது.

அதே போல் மற்ற சாலைகளிலும் தேவையின்றி வைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகளை அகற்றி, சீரான போக்குவரத்துக்கு வகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments