சென்னையில் இருசக்கர வாகனத்தில் இருவராக பயணிப்பதற்கான தடை தீவிரமாக கடைபிடிப்பு

0 6153

சென்னையில் இருசக்கரவாகனங்களில் இருவராக பயணிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை தீவிரமாக அமல்படுத்தி வரும் போக்குவரத்து போலீசார், 2 பேராக இருசக்கர வாகனங்களில் வருவோருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் ஏற்கனவே முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

அதே போல் சிவப்பு மண்டலமான சென்னையில் இருசக்கர வாகனங்களில் இருவராக பயணிக்கவும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது அதனை தீவிரமாக அமல்படுத்தி வரும் போலீசார், ஒருவருக்கு மேல் இருசக்கர வாகனங்களில் வருவோரை பிடித்து வழக்குப் பதிவு செய்வதுடன் 100 ரூபாய் அபராதமும் விதித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments