திருப்பதியில் தரிசனத்திற்கு அனுமதி..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சோதனை அடிப்படையில் கோவில் ஊழியர்களையும் உள்ளூர் பக்தர்களையும் அனுமதிக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டுள்ளது. முக்கிய பூஜைகள் மட்டும் குறைந்த அளவு அர்ச்சகர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகின்றது.
வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பரிசீலித்து வரும் நிலையில், ஏழுமலையான் கோவிலுக்குள் சோதனை அடிப்படையில் கோவில் ஊழியர்களையும் உள்ளூர் பக்தர்களையும் அனுமதிக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
8ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணையில், பக்தர்களும் ஊழியர்களும் 6 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
Comments