பழங்கால கோயில்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள மக்கள் வருகை
தாய்லாந்தில் ஊரடங்கில் படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டு வரும் நிலையில், பழங்கால கோயில்களில் பாரம்பரிய உடை மற்றும் முகக்கவசத்துடன் பலரும் வருகை தர தொடங்கி உள்ளனர்.
அந்நாட்டில் கொரோனா தொற்றால் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 57 பேர் உயிரிழந்துள்ளனர். நோய் பாதிப்பு வீதம் குறைவாக உள்ளதால் ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்பட்டு, வீட்டில் அடைந்து கிடந்த பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த மாதம் 22 ஆம் தேதி அயுதாயாவில் உள்ள புகழ்பெற்ற சைவத்தநாராம் கோயில் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், பெண்கள் பலரும் தங்கள் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உடையணிந்து விதவிதமாக புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
Comments