சென்னையில் முதல் கட்டமாக அத்தியாவசிய பேருந்துகளில் மின்னணு பண பரிவர்த்தனை அறிமுகம்
சென்னையில் அத்தியாவசியமாக இயக்கப்படும் 2 பேருந்துகளில் சோதனை முயற்சியாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டுக்கு பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பட்டை, தியாகராய நகர் பணிமனைகளில் இருந்து தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அலுவலகம் சென்று வர 6 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், முதற்கட்டமாக 2 பேருந்துகளில் மின்னணு பண பரிவர்த்தனையில் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
QR கோர்டு ஐ பயன்படுத்தி Patym, Google pay, Phone pe, Amazon pay போன்ற செயலிகள் மூலம் டிக்கெட்டுக்கான பணத்தை செலுத்தலாம். டிக்கெட் கட்டணம் மாநகர போக்குவரத்து கழகத்தின் வங்கி கணக்குக்கு நேரடியாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
Comments