சலூன்கள், ஸ்பா, அழகு நிலையங்களுக்கு செல்ல ஆதார் அட்டை கட்டாயம்-தமிழக அரசு

0 2478
சலூன்கள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்களுக்கு செல்லுபவர்கள் கட்டாயம் ஆதார் அட்டை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சலூன்கள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்களுக்கு செல்லுபவர்கள் கட்டாயம் ஆதார் அட்டை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சலூன்கள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்களில், வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, கைபேசி மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களை குறித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கையுறை மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கவும், நுழைவு வாயிலில் சானிடைசர் அல்லது கைகளை கழுவதற்காக வசதி ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரேநேரத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் வருவதை தடுக்க ஆன்லைன் மூலம் நேரம் நிர்ணயித்து சேவை வழங்கவும், ஒருமுறை பயன்படுத்திய அழகு சாதனப் பொருட்களை சுகாதார முறையில் அப்புறப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments