சூரிய மண்டலத்திற்குள் நுழைந்த 900 அடி நீளமுள்ள பனிப்பாறை
விண்வெளியில் 900 அடி நீளமுள்ள பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் வருவதை வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒமூவாமூவா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பனிப்பாறையில் ஹைட்ரஜன் வாயு நிரம்பியிருப்பதாகக் கூறியுள்ள ஆய்வாளர்கள், இயற்கையில் இது மிகவும் அரிதான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒமூவாமூவா பனிப்பாறை தற்போது சூரிய மண்டலத்திற்குள் நுழைந்துள்ளதாகவும், இதுபோன்ற ஹைட்ரஜன் பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் வருவது இதுவே முதன்முறை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சனிக்கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள பனிப்பாறை அதனைக் கடந்து செல்ல 10 ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்றும் கூறியுள்ளனர். பனிப்பாறையின் கிராபிக்ஸ் படத்தையும் நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.
Comments