அமெரிக்க கருப்பின இளைஞர் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாக உடற்கூறு ஆய்வில் அதிகாரப்பூர்வ தகவல்
அமெரிக்க கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாக உடற்கூறு ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
மின்னாபொலிஸ் நகரை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டை கைது செய்த போலீஸ் ஒருவர், அவரது கழுத்தை கால் முட்டியால் நெரித்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
அது குறித்த வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரது மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்டின் அதிகாரப்பூர்வ உடற்கூறு ஆய்வு இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது.
ஹென்னபின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கழுத்து நெரிக்கப்பட்டதாலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிளாய்டு உயிரிழந்திருப்பதாகவும், அது நிகழ்ந்த விதம் படுகொலை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#BREAKING George Floyd death was 'homicide' caused by 'neck compression': official autopsy pic.twitter.com/DuPOyE7dMk
— AFP news agency (@AFP) June 1, 2020
Comments