உலகின் 2வது பெரிய செல்போன் உற்பத்தி மையமாக இந்தியா விளங்குகிறது - ரவிசங்கர் பிரசாத்
உலகின் 2வது பெரிய செல்போன் உற்பத்தி மையமாக இந்தியா விளங்குவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் இதுபற்றி குறிப்பிட்டுள்ள அவர், இந்தியாவில் இதுவரை 330 மில்லியன் செல்போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், 2014ம் ஆண்டு கணக்கீட்டின்படி 60 மில்லியன் செல்போன்கள் மட்டும் தயாரிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
உற்பத்தி செய்யப்பட்ட செல்போன்களின் மதிப்பு 2014ம் ஆண்டு 3 பில்லியன் டாலர்களாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த மதிப்பு 2019ம் ஆண்டு 30 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Comments