பாரதம், இந்தியா... ஒரே நாடு இரண்டு பெயர்... காரணம் என்ன?

0 45912
பாரதம், இந்தியா... ஒரே நாடு இரண்டு பெயர்... காரணம் என்ன?

பெயர்தான் ஒவ்வொருவருக்கும் அடையாளம். மனிதர், தெரு, நகரம், நாடு , இனம், மொழி என ஒவ்வொன்றுக்கும் பெயர்தான் அடையாளத்தை கொடுக்கும். அப்படித்தான் நம் நாடும் இந்தியா என்று அழைக்கப்படுகிறது. மொகலாயர் காலத்தில் இந்தியா, 'ஹிந்துஸ்தான்' என்றே அழைக்கப்பட்டது. பிரிட்டிஷார் காலத்துக்கு பிறகுதான், மாநிலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, இந்தியா என்று பெயர் சூட்டப்பபட்டது .

river

அன்றைய காலக்கட்டத்தில் , ஐரோப்பியர்கள்தான் உலகின் பல நாடுகளை ஆண்டு வந்தார்கள்.  கீழை திசை நாடுகளின் பெயர்களை சரிவர உச்சரிக்க முடியாமல் ஐரோப்பியர்கள் தடுமாறினார்கள் . இதனால், எளிதாக பெயர்களை உச்சரிக்கும் வகையில், பல நாடுகளுக்கு ஆங்கிலப் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்  பிரிவு ஒன்றின்படி நம் நாட்டுக்கும் இரண்டு பெயர்கள் உள்ளன.

இந்தியாவின் மற்றோரு பெயர் பாரதம். பாரதம் என்பதுதான் நம் நாட்டின் உண்மையான பெயர். இந்தியா என்பது சூட்டப்பட்ட பெயர். இந்திய வரலாற்றில், புராணங்களில், எந்த இடத்திலுமே இந்தியா என்கிற பெயரே கிடையாது. தற்போது, இலங்கை என்று அழைக்கப்படும் நம் அண்டை நாடு நீண்ட காலமாகவே 'சிலோன் ' என்றே அழைக்கப்பட்டது. ஆனால், ஆங்கிலேயர் வருகைக்கு பிறகு ஸ்ரீலங்கா என்று அந்த நாட்டின் பெயர் மாற்றப்பட்டது. சோ... ஆங்கிலேயர்கள் பல நாடுகளின்  வளங்களை கொள்ளையடித்து சென்றது மட்டுமல்லாமல், பெயர் அடையாளத்தையும் கூட மாற்றி சென்றுள்ளனர்.

பல ஆண்டு காலமாகவே, இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றவேண்டுமென்ற கோரிக்கை உள்ளது. இந்த நிலையில், டெல்லியைச் சேர்ந்த நமக் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், இந்தியா என்பது அடிமைத்தனத்தின் பிரதிபலிப்பாக உள்ளது. எனவே, இந்தியா என்ற பெயரை மாற்றி பாரத் அல்லது ஹிந்துஸ்தான் என்று மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும்  இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு ஒன்றின்படி, சென்னை மாகாணத்தைச் சேர்ந்த எம். ஏ. ஐயங்கார் இந்தியாவுக்கு மாற்றாக பாரத், பாரத் வர்ஷா மற்றும் இந்துஸ்தான் பெயர்களை முன்மொழிந்ததாக தன் மனுவில் நமக் மேற்கோள் காட்டியுள்ளார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

சரி... இந்தியாவுக்கு பாரதம் என்ற பெயர் உருவானது எப்படி?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியது டாக்டர். அம்பேத்கர். தலைமையிலான குழுதான் உருவாக்கியது. இந்தக் குழு நம் நாட்டுக்கு இந்தியா, பாரதம் என்ற இரு குழுக்களை பரிந்துரைத்தது. இந்த பரிந்துரை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் கடும் விவாதத்துக்குள்ளாளனது. கடந்த 1949- ம் ஆண்டு நவம்பர் 18- ந் தேதி நாடாளுமன்றத்தில் இந்த பெயர் விவகாரம் குறித்து கடும் விவாதம் எழுந்தது.

பார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த பெரார் தொகுதி எம்.பியும் சுதந்திர போராட்ட வீரருமான ஹெச்.வி. காமத், இந்தியா என்ற பெயருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விவாதத்தில் ஈடுபட்டார். 'பாரத் என்றோ அல்லது இந்து என்ற பெயரை முன்னிறுத்திதான் நம் நாட்டின் பெயர் அமைய வேண்டும். இந்தியா என்று ஆங்கிலத்தில் மட்டும் அழைத்தால் போதுமானது' என்றார் ஹெச்.வி காமத்.

image

மற்றோரு சுதந்திர போராட்ட வீரரான சேத் கோவிந்த தாசும், இந்தியா என்ற பெயருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 'புராணங்கள், வேதங்கள், மகாபாரதத்தில் பாரதம் என்றே இந்தியா அழைக்கப்பட்டது. சீனப் பயணி யுவான் சுவாங் கூட பாரதம் என்றே அழைத்தார் . மகாத்மா காந்தி  ,'பாரத் மாதா கீ ஜே...' என்ற கோஷத்தை எழுப்பியே சுதந்திரத்துக்கா போராடினார். அதனால், பாரதம் என்ற பெயரே நம் நாட்டுக்கு தகுந்த அழகான பெயராக இருக்கும். இந்தியா என்கிற பெயரை அரசியலமைப்புச் சட்டத்தில் முன்நிறுத்தக் கூடாது என்றும் வேண்டினார். ஆனாலும், இறுதியில் இந்தியா என்ற பெயரே சூட்டப்பட்டு விட்டது. 

சிந்து நதியை கிரேக்கர்கள் இந்து என்று அழைத்தார்கள். ஆங்கிலத்தில் இந்த நதியை 'இன்டஸ்' என்று சொல்வார்கள். இன்டஸ் என்ற பெயரிலிருந்து உருவானதுதான் இந்தியா என்ற பெயர். இமயமலையில் தோன்றும் இந்த நதி இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் ஓடுகிறது. இந்த நதியிலிருந்து ஜீலம், சீனாப், ராவி, பியாஸ் , சட்லெஜ் நதிகளும் உருவாகியுள்ளன. இந்த ஐந்து நதிகளும் ஒடும் பகுதிதான் தற்போதைய பஞ்சாப் மாநிலம். சிந்து சமவெளி நாகரீகம் இந்த நதிக்கரையில்தான் செழித்து வளர்ந்திருந்தது. மொகஞ்சதோரோ, ஹரப்பா நகரங்கள் இங்கு உருவானவைதான்.  அத்தகைய பெருமைமிகு சிந்து நதியின் பெயரையே நம் நாட்டுக்கும் நாமக்கரமாக சூட்டினார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments