இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 13 பேர் சுட்டுக் கொலை

0 6379
இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 13 பேர் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 13 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கடந்த 28 ஆம் தேதியில் இருந்து ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவுஷரா பிரிவில் உள்ள கட்டுப்பாட்டு எல்லை வழியாக, பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி இந்திய எல்லைக்குள் மறைந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர்.

அப்போது, அப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் காணப்பட்ட தீவிரவாதிகள் 3 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதேபோல், மெந்தர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் மேலும் 10 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலின் மறைவில் ஏராளமான தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் பாகிஸ்தான் ஊடுருவச் செய்துள்ளதாகவும், அவர்களை கண்டுபிடித்து அழிக்கும் நடவடிக்கைகள் தொடரும் எனவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments