டெல்லியில் அனைத்து எல்லை பகுதிகளும் ஒரு வாரத்திற்கு மூடி சீல்வைப்பு
டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து எல்லைப் பகுதிகளும் ஒரு வாரத்திற்கு மூடி, சீல் வைக்கப்படும் என்று அம் மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
காணொலி மூலம் இந்த அறிவிப்பைவெளியிட்ட அவர், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். அரசு அலுவலர்கள், தங்களது அடையாள அட்டையை காட்டி விட்டு, பயணத்தை தொடரலாம் என கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றார். ஒரு வாரம் கழித்து, எல்லையை திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, மக்களிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும்
என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். டெல்லியில் சலூன் கடைகளை திறக்க அனுமதி அளித்த அவர், ஸ்பாக்கள் இயங்க தடை விதித்தார். ( Gfx - Out )
With borders opening up but Corona cases rising, can Delhi open its hospitals for treatment of ppl from across the country? Will it put pressure on capacity to handle Corona? Should Delhi’s hospitals be reserved for Delhi residents?- We seek ur suggestions https://t.co/OXe7M6ZRM4
— Arvind Kejriwal (@ArvindKejriwal) June 1, 2020
Comments