கல்விக்கடன் கட்டச் சொல்லி மிரட்டல்-இளைஞர் தற்கொலை

0 7795

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்விக்கடனை கட்டச் சொல்லி வங்கி மற்றும் வங்கி ஏஜண்டுகள் மிரட்டியதால் மனமுடைந்த இளைஞர் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே வெண்கலம் கிராமத்தை சேர்ந்தவர்  பாண்டுரங்கன். இவர் கடந்த 2008 -2009 ஆம் ஆண்டு  ரிஷிவந்தியம் சிட்டி யூனியன் வங்கியில் பொறியியல் படிப்பு படிப்பதற்காக, இரண்டே கால் லட்ச ரூபாய் கல்விக் கடன் பெற்றுள்ளார்.

ஆனால் உரிய வேலை கிடைக்காத நிலையில் அவரால் கல்விக்கடனை முறையாக கட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து வங்கி மற்றும் வங்கி ஏஜண்டுகள் பாண்டுரங்கத்திடம் கடனை கட்டச் சொல்லி மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்த பாண்டுரங்கன் பெங்களூரில் தான் வசித்த வீட்டருகே இருந்த பெரிய கட்டிடத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் தான் தற்கொலை செய்து கொள்வதற்கான  காரணத்தையும் வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று அவரது உடல் பெங்களூரில் இருந்து சொந்த ஊர் எடுத்து வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments