வாள் எடுக்கும் வம்ச வாரிசுகள் 10 பேர் கைது..! ஓசி கேக்கால் ஜெயில்

0 7805
வாள் எடுக்கும் வம்ச வாரிசுகள் 10 பேர் கைது..! ஓசி கேக்கால் ஜெயில்

டிக்டாக்கில் வாள்வீசும் வம்சம் என வீடியோ பதிவிட்ட கமுதி மாணவர் ஒருவர், வாளால் பிறந்த நாள் கேக் வெட்டியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் கேக் வாங்கி தின்பதற்காக கூடி நின்று கைதட்டி உற்சாகப்படுத்தியவர்களையும் போலீசார் கொத்தாக தூக்கிச்சென்றனர்.

கையில் கூர்மையான வாளை வைத்துக் கொண்டு கம்பு போல சுற்றி டிக்டாக்கில் கெத்து காட்டிய இவர் தான் போலீசாரிடம் சிக்கிய பெர்த் டே பேபி..!

எப்போதும் கையில் ஸ்மார்ட் போனுடன் நண்பர்கள் புடை சூழ வலம் வரும் மணலூர் கிராமத்தை சேர்ந்த இந்த வாலு மாணவர், சம்பவத்தன்று வாளால் பிறந்த நாள் கேக் வெட்டியுள்ளார்

அப்போது சிலர் வீடியோ எடுக்க போலீசுக்கு தெரிந்து விடும் என சிலர் எச்சரித்துள்ளனர். இருந்தாலும் வாள் ஏந்தும் வம்ச வாரிசுகள் என்பதால் தில்லாக வீடியோ எடுத்து அதனை டிக்டாக்கிலும் பதிவிட்டுள்ளனர்

சிறுவன் ஒருவன் கையில் வாளுடன், ரவுடிகள் போல கேக் வெட்டும் காட்சியை சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இந்த வாள் வீச்சு சேட்டை வீடியோ இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் சிறப்பு செல்போன் எண்ணுக்கும் அனுப்பபட்டுள்ளது.

இதையடுத்து மணலூர் கிராமத்திற்கு விரைந்து சென்ற அபிராமபுரம் காவல்துறையினர் மாணவரிடம் இருந்து வாளை பறிமுதல் செய்ததோடு வாளால் கேக் வெட்டிய அந்த மாணவரையும் கைது செய்ததால் பெர்த் டே அவருக்கு பேடு டே ஆனது..! மேலும் பள்ளி செல்லும் மாணவன் ஒருவன் ஆயுதத்தால் கேக் வெட்டியதை எச்சரிக்காமல், ஓசியில் கேக் கிடைக்கும் என்பதால் கூடி நின்று கைதட்டி உற்சாகப்படுத்திய 9 பேரையும் கொத்தாக தூக்கிச்சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கைது செய்யப்பட்ட 10 பேர் மீதும் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். கொரோனா காரணமாக அந்த 10 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்காமல், காவல் நிலைய ஜாமீனில் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

பண்டைய காலம் போல கையில் வாள் ஏந்தினால் மாவீரன் ஆக முடியாது, ரவுடியாகி வாழ்க்கையை வீணாக்கி வாய்தாவுக்கு நீதிமன்றத்திற்கு நடையாய் நடக்க வேண்டி இருக்கும் என்பதை உணர்ந்தாவது கையில் வாள் எடுப்பதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments