தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு 9 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்
கொரோனாவால் ஏற்பட்டுள்ள உலகச் சூழலில் பல நிறுவனங்கள் சில நாடுகளில் இருந்து முதலீடுகளை இந்தியாவுக்கு இடம் பெயரச் செய்ய முடிவு செய்துள்ள நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
யுனைட்டட் டெக்னாலஜி, ஜெனரல் எலக்ட்ரிக்கல்ஸ், போயிங், ரோல்ஸ் ராய்ஸ்,ஏர்பஸ் உள்ளிட்ட விமான தொழிற்துறையில் முன்னணியில் இருக்கும் 9 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான பல சாதக அம்சங்களை குறிப்பிட்டுள்ள அவர், புதிய முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவையும், ஊக்கச் சலுகைகளையும் வழங்கும் என உறுதி அளித்துள்ளார்.
இந்த வகையில் வரும் வெளிநாட்டு நிறுவனங்களை கவர தலைமைச் செயலர் தலைமையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழுவையும் முதலமைச்சர் ஏற்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments