வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு : ஆர்.எஸ்.பாரதிக்கு நிபந்தனை ஜாமீன்
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர். எஸ். பாரதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, சென்னை கூடுதல் முதலாவது அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பட்டியலினத்தவருக்கு எதிராக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் கடந்த 23 - ம் தேதி கைது செய்யப்பட்டிருந்த ஆர். எஸ். பாரதிக்கு, 31- ம் தேதி வரை, இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் , முதன்மை நீதிமன்றத்தில் சரண் அடைய ஆர். எஸ். பாரதிக்கு உத்தரவிட்டது.
இதனை ஏற்று சரண் அடைந்த ஆர். எஸ். பாரதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன்மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், தீர்ப்பை தள்ளி வைத்தார்.
மாலையில் தீர்ப்பு அளித்த நீதிபதி, காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆர். எஸ் பாரதிக்கு ஜாமீன் வழங்கி, உத்தர விட்டார்.
Comments