பட்டியலின மக்களை இழிவாகப் பேசியதாக ஆர்.எஸ்.பாரதி,தயாநிதிமாறனை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0 1943

பட்டியலின மக்களை இழிவாகப் பேசியதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.பி. தயாநிதிமாறனை கண்டித்து தமிழகத்தில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் மகுடஞ்சாவடி ஒன்றிய பகுதிகளை சேர்ந்தவர்கள், ஆர்.எஸ். பாரதியை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூரிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, அந்தியூர், கரூர், குமாரபாளையம், நாகை, மன்னார்குடி, ஈரோடு, காரைக்குடி, தூத்துக்குடி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வந்தவாசி, திருச்செங்கோடு, பெரம்பலூர், திருவள்ளூர், திருத்தணி, அம்பத்தூர், போரூர் என பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பட்டியலின மக்களை இழிவாகப் பேசியதாக, ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியிருந்ததோடு முழக்கங்களையும் எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments