அரசுப் பேருந்துகளில் paytm மூலம் பண பரிவர்த்தனைக்கு ஏற்பாடு

0 4974

நோய் பரவலை தடுக்கும் விதமாக பேருந்துகளில் paytm உள்ளிட்ட பரிவர்த்தனை முறையை அதிகரித்து வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சோதனை முறையில் சென்னை தலைமைச் செயலகம் வரை இயக்கப்படும் 2 பேருந்துகளில், paytm வசதி மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் அதன் பயன்பாட்டைப் பொறுத்து மற்ற இடங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

இன்று முதல் 30ஆம் தேதிவரை 60 சதவீத பயணிகளை கொண்டு, 5 ஆயிரத்து 669 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், தடை செய்யப்பட்ட மண்டலங்கள் தவிர மற்ற மண்டலங்களில் தனியார் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக ஒரு வாரத்தில் அறிவிப்புகள் வரும் என்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments