நடு இருக்கையை முடிந்த வரை காலியாக வைத்திருக்க விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
நடு இருக்கையை முடிந்த வரை காலியாக வைக்குமாறு விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
விமானங்களில் இரு புறமும் உள்ள தலா 3 வரிசை இருக்கைகளால், தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதாகவும், நடுஇருக்கை காலியாக விடப்படாததால் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதில்லை எனவும் பல்வேறு புகார்கள் எழுந்து, விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த நிலையில், இன்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் நடு இருக்கையை காலியாக விட முடியவில்லை என்றால், பயணிகளுக்கு இடையே தடுப்பு ஏற்படும் வகையில் ஏதாவது மறைப்பை ஏற்பாடு செய்யுமாறு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அதிக அளவில் பயணிகளை கொண்டு செல்ல வேறு வழியில்லை என்றால் மட்டுமே இந்த தடுப்பு ஏற்பாட்டை செய்யலாம் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Comments