ஐசிஎம்ஆர் விஞ்ஞானிக்கு கொரோனா தொற்று பாதிப்பு

0 2246
டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் மூத்த விஞ்ஞானி ஒருவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து அதன் அலுவலகத்தில் தீவிர கிருமிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் மூத்த விஞ்ஞானி ஒருவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து அதன் அலுவலகத்தில் தீவிர கிருமிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இரண்டு நாட்கள் இந்த நடவடிக்கை தொடரும் என்பதால் கொரோனா தொடர்பான பணி குழுவினர் மட்டுமே அலுவலகம் வந்தால் போதும் எனவும் மற்றவர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொற்றுக்கு ஆளாகியுள்ள விஞ்ஞானி மும்பை ஐசிஎம்ஆர்-ல் பணியாற்றி வருகிறார், கடந்த வாரம் டெல்லி வந்த அவர் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த சிஆர்பிஎஃப் உயர் அதிகாரி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments