காட்மேன் வெப் சீரிஸ் தயாரிப்பாளர், இயக்குநர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

0 1350

காட்மேன் எனும் இணையதள தொடரின் டிரெய்லர் காட்சிகளில் குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக பேசியிருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதன் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர்கள் ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்து ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ள இணையதளத் தொடரின் டீசர் அண்மையில் வெளியானது.

அதில் இடம்பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும், தங்கள் சமூகத்தை கொச்சை படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக பிராமண அமைப்புகள் புகார் அளித்தன.

இந்நிலையில் தொடரின் இயக்குநர் பாபு யோகேஷ்வரன், தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இருவரும் வரும் 3ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments