விமான எரிபொருள் விலை 50 சதவிகிதம் உயர்வு
விமான எரிபொருள் விலையை 50 சதவிகிதம் உயர்த்தி உள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் கிலோ லிட்டருக்கு 22,544 ரூபாயாக இருந்த விமான எரிபொருள் இப்போது 33,575 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வரை விமான எரிபொருளின் விலை, கிலோ லிட்டருக்கு 65000 ரூபாய் வரை உயர்ந்தது.
ஆனால் அதன் பின்னர் அதன் விலை சரசரவென்று கீழே இறங்கினாலும், ஊரடங்கால் பயணியர் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக, அதன் பலன் விமான நிறுவனங்களுக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வு, கடந்த 25 ஆம் தேதி முதல் குறைந்த எண்ணிக்கையில் சேவைகளை நடத்தும் விமான நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும் என கருதப்படுகிறது.
Comments