திருத்தணிகாசலத்தைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து வழக்கு

0 1129
திருத்தணிகாசலத்தைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து வழக்கு

போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்துள்ள மனுவுக்குப் பதிலளிக்கச் சென்னை மாநகரக் காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகக் கூறிச் சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்ட திருத்தணிகாசலத்தைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது மேலும் பல புகார்கள் வந்ததால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்தனர்.

இதை எதிர்த்துத் தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து ஒரு வாரத்தில் பதில் அளிக்கச் சென்னை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 8 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments