அரபிக்கடலில் உருவாகிறது புயல்...

0 4343

அரபிகடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்திற்குள் புயலாக உருமாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிகடல், அதை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிகடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.

மும்பையில் இருந்து 690 கிலோமீட்டர் தொலைவிலும், குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து 920 கிலோமீட்டர் தொலைவிலும் தெற்கு - தென் மேற்கு திசையில் நிலை கொண்டுள்ளது.

இன்று மாலை அல்லது இரவுக்குள் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் மேலும் வலுவடைந்து புயலாக உருமாறும்.

நாளை வரை வடக்கு திசை நோக்கி நகர்ந்து அதன் பின்ன வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து வடக்கு மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்திற்கு இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments