பொது இடங்களில் எச்சில் துப்பினால் தண்டனை..!
பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை வழங்கப்படும் என தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா பரவி வரும் சூழலில் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் விதமாக தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் பல தளர்வுகளுடன் 5-ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், பொது இடங்களில் எச்சில் துப்புவது, மது அருந்துவது, பான், குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது இடங்களில் எச்சில் துப்பினால் தண்டனை..! #TNGovt https://t.co/HerJXqzI3K
— Polimer News (@polimernews) June 1, 2020
Comments