கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களே முன்னணி போர் வீரர்கள் - பிரதமர் மோடி
கொரோனா வைரஸ் கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருக்கலாம், ஆனால் அதை ஒழிக்க போராடும் இந்திய மருத்துவர்கள் வைரசால் வெல்ல முடியாத திறனுடையவர்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவ பல்கலைக்கழகத்தின் 25 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி நடத்திய காணொலி உரையில் மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரண்டு உலக மகா யுத்தங்களுக்குப் பிறகு உலகம் சந்திக்கும் மிகப்பெரிய நெருக்கடியாக கொரோனா இருப்பதாக மோடி வர்ணித்தார். உலகப்போர்களுக்குப் பிறகு உலகம் மாறியது போல கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டம் வித்தியாசமானதாக இருக்கும் என்றார் மோடி.
கொரோனாவுக்கு எதிரான போரில் சீருடை அணியாத போராளிகளாக மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் திகழ்வதாக மோடி பாராட்டினார். கொரோனாவுக்கு எதிரான போரில் அவர்கள் வெல்வார்கள் எனவும் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
25 years mean Rajiv Gandhi University of Health Sciences is in the prime of its youth. This is the age to think even bigger and do even better. I am confident that the University will continue to scale new heights of excellence in the times to come: PM Modi pic.twitter.com/5lZA62oUTT
— ANI (@ANI) June 1, 2020
Comments