அமண்டா புயல் காரணமாக 7 பேர் உயிரிழப்பு

0 1339

எல் சால்வடாரில் அமண்டா புயல் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு மத்திய அமெரிக்கா மற்றும் தெற்கு மெக்ஸிகோவின் சில பகுதிகளில் அமண்டா புயல் காரணமாக கனமழை கொட்டித் தீர்க்கும் என்றும், மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வடாரில், பலத்த மழை கொட்டித் தீர்த்ததால் ஆறுகளிலும் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பல்வேறு இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கட்டிடங்கள் பல இடிந்து விழுந்தன. இதில் 8 வயது சிறுவன் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments