CRPF வீரர்களுக்கு குண்டு துளைக்காத கவச உடைகள், வாகனங்கள் வழங்க மத்திய அரசு ஒப்புதல்
ஜம்மு காஷ்மீர் மற்றும் நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு 42 ஆயிரம் குண்டு துளைக்காத கவச உடைகளும், 176 வாகனங்களும் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 70 ஆயிரம் வீரர்கள் காஷ்மீரிலும், 90 ஆயிரம் வீரர்கள் நக்சல் பாதிப்புள்ள மாநிலங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில், சிஆர்.பி.எப் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் குண்டு துளைக்காத உடையை விட பெரிய அளவான உடைய, வீரரின் கழுத்து, மார்பு பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் விதமாக வழங்கப்படவுள்ளது.
அதேபோல், தலா 6 பேர் வரை பயணிக்கக்கூடிய 176 கவச வாகனங்கள் வழங்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வகை வாகனங்களை கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கி குண்டுகளால் துளைக்க முடியாது.
Comments