மனோ பாலா, சிங்கமுத்து மீது நடிகர் வடிவேலு புகார்

0 24234

நடிகர் மனோ பாலா நடத்தி வரும் யூடியூப் சேனலில் நடிகர் சிங்கமுத்து தன்னை பற்றி தரக்குறைவாக பேசியுள்ளதாக நடிகர் சங்கத்தில் வடிவேலு புகார் அளித்துள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வரும் நடிகர் மனோபாலா, அதில் நடிகர்கள் பலரிடமும் பேட்டி எடுத்து வீடியோ பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நடிகர் சிங்கமுத்துவிடம் பேட்டி எடுத்த மனோ பாலா, வடிவேலு குறித்த கேள்விகளை கேட்க, அதற்கு பதிலளித்த சிங்கமுத்துவும் வடிவேலுவை பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் அதனை பிரபல நடிகர்களை உள்ளடக்கிய வாட்ஸ்ப் குழுவிலும் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

சிங்கமுத்துவுக்கும் தனக்கும் ஏற்கனவே பிரச்சனையாகி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இந்த வீடியோவில் சிங்கமுத்து பேசிய கருத்துகளால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், எனவே இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகர் சங்கத்தில் வடிவேலு புகாரளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments