கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் பாதுகாப்பு பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி கவலை
நீதித்துறைக்கு எதிராக, சகிப்புத்தன்மையற்ற நிலை அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தமது ஆன்லைன் உரையாடலில் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் நீதித்துறைக்கு எதிராக கருத்துகள் எரிகிற தீயில் எண்ணெய் வார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் நீதித்துறைக்கு சேதம் விளைவதாகவும் விமர்சன எல்லைகள் வரம்பு மீறுவதாகவும் வேதனை தெரிவித்துள்ள எஸ்.கே.கவுல், எந்த ஒரு அமைப்பின் மீதும் அவநம்பிக்கையை வளர்த்துக் கொண்டே போனால் அராஜகம் தான் மிஞ்சும் என்று எச்சரித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்படும் சூழலில் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தை பாதுகாப்பது சவாலான பணி எனக் குறிப்பிட்டார்.
உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து புலம் பெயர்ந்த தொழிலாளர் பிரச்சனையை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட போது, நீதிபதிகள் அமர்வில் எஸ்.கே.கவுலும் இடம்பெற்றிருந்தார்.
Comments