மகாராஷ்ட்ராவில் இருந்து வருவோரை 7 நாள் தனிமைப்படுத்த உத்தரவு - கர்நாடக அரசு
மகாராஷ்ட்ரத்தில் இருந்து வரும் பயணிகளுக்கான தனிமைக்காலத்தை 14 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைத்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஓட்டல்களில் தங்க வசதியில்லாதவர்கள் அரசு அமைத்துள்ள முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள். இது குறித்து கர்நாடக அரசு நேற்று வெளியிட்டுள்ள பயண வழிகாட்டலின்படி, மாநிலத்துக்குள் வரும் அனைத்துப் பயணிகளும் சேவா சாந்து (Seva-Sandhu )இணையவெளியில் தாமாக முன்வந்து உடல்நலம் குறித்த விவரத்தைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ரா தவிர இதர மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் கர்நாடக அரசு வலியுறுத்தியுள்ளது. தொழில் நிமித்தமாக வந்து 7 நாட்களுக்குள் திரும்பிச் செல்வோர் அரசு மருத்துவமனையில் சோதனை நடத்தி அதன் முடிவையும் திரும்பிச்செல்வதற்கான டிக்கட்டையும் காட்டி தனிமைப்படுத்துதல் நடவடிக்கையை தவிர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments