பிரேசில் அதிபருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
பிரேசிலில் அதிபரின் ஆதரவாளர்களுக்கும், எதிர்கட்சியினருக்கும் இடையே நடந்த மோதலை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கட்டுப்படுத்தினர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும், பொருளாதார முன்னேற்றங்களைத் தடுப்பதாகவும் அதிபர் போல்சனாரோ மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இதன் காரணமாகவும், அதிபருக்கு எதிராகவும் சா பாலோ நகரில் போராட்டம் நடந்தது. எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.
கெரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் வரிசையில் பிரேசில் 2ம் இடத்தில் உள்ளது. அங்கு 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
Comments