ரயில் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இன்று முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் பயணிகள், ரயில் நிலையத்திற்கு வர வேண்டும். பயணிகள் அனைவரும் மருத்துவச் சோதனை செய்யப்பட்டு உள்ளே அனுப்பப்படுவர். கொரோனா அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
பயணிகள் கண்டிப்பாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன் முகக்கவசம் அணிந்து இருக்கவேண்டும். பயணச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். சென்று சேரும் ரயில் நிலையத்திலும் அரசு வரையறுத்துள்ள விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நோய்த் தொற்றைத் தவிர்க்கப் பயணிகள் வீட்டிலிருந்து உணவு கொண்டு வரலாம்.
— Ministry of Railways (@RailMinIndia) June 1, 2020
Comments