"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
இன்று முதல் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடக்கம்
கேரளாவில் இன்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று காலை பலத்த மழை பெய்தது.
கடந்த சில நாட்களாக தென்கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த காற்று சுழற்சி தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது காற்றழுத்த மண்டலமாகவும் வலுப்பெற்று புயலாக மாறும் என்று வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புயல் கோவா-மும்பை இடையே கரையைக் கடக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தென்மேற்கு கடலோரம், கேரள கடல்பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments