பரவும் வன்முறையால் பதற்றத்தில் அமெரிக்கா

0 3122
பரவும் வன்முறையால் பதற்றத்தில் அமெரிக்கா

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் போலீசாரால் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஊரடங்கு உத்தரவையும் மீறி போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அமெரிக்காவின் மின்னபொலிஸ் என்ற இடத்தில் கருப்பின இளைஞரை சில போலீசார் கடுமையாகத் தாக்கினர். அதில் ஒருவர் ஜார்ஜ் பிளாய்ட் என்ற அந்த இளைஞரின் கழுத்தில் காலால் அழுத்தியதில் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்தார், இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் இதையடுத்து கருப்பினத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறை நீடிப்பதாகக் கூறி பல்வேறு இடங்களிலும் இளைஞரின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டங்கள் வெடித்தன.

மின்னசொட்டா மாநிலத்தை தொடர்ந்து லாஸ் ஏஞ்சலீஸ், சிகாகோ, மியாமி உட்பட பல்வேறு நகரங்களிலும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. போராட்டங்களின் போது பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின.

இதனால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதனால் அட்லாண்டா, லாஸ் ஏஞ்சலீஸ், பிலடெல்பியா, டென்வர், சின்சினாட்டி, போர்ட்லேண்ட், லூயிஸ்வில், கெண்டக்கி, ஓரேகான் ஆகிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் ஊரடங்கை மீறி அப்பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. இதனிடையே வெள்ளை மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தடுப்புகளைத் தாண்டி முன்னேறிய அவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் பாதுகாப்பு கருதி வெள்ளை மாளிகை முன் ராணுவ கவச வாகனங்கள், டேங்குகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இதனிடையே ஜார்ஜ் பிளாயிட்டின் மரணத்திற்கு நீதிகேட்டு அமெரிக்கா மட்டுமின்றி இங்கிலாந்திலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. கருப்பின மக்களும் வாழவேண்டும் என்ற பொருள் கொண்ட BLM Movement இயக்கம் சார்பில் லண்டன் நகர வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.இதனைப் போன்றே புகழ்பெற்ற டிராஃபால்கர் சதுக்கத்தின் முன்பாக நூற்றுக்கும் அதிகமான மக்கள் கூடியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாகவும் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்றிணைந்து ஜார்ஜ் ஃப்ளாயிட் மரணத்திற்கு நீதிகேட்டும், கருப்பின மக்களும் வாழவேண்டும் என்று முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments